Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
கைகொடுத்துஎன் மானம்காத்தாய் தையல்என் குரல்கேட்டு
நின்னடியே சரண்என்றும் க்ருஷ்ணா முகுந்தா ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 1
உரிமைஉண்டோ சொல்அந்த தர்மனுக்கு க்ருஷ்ணா-ஐயஹோ
எனைபகடுகாய் என்றானே தன்னைசூதில் தோற்றபின்னே
அதர்மமிதை தடுத்துநிறுத்த யாருமிலரோ இச்சபையினிலே
நற்குணசெம்மல் விகர்ணன்நீதி சொல்லும்கேளா மூடரோ
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
அமுதகீத ஆச்சாரியா குருக்ஷேத்ர ஸ்ரீக்ருஷ்ணா
தர்மஸத்ய வரதாவேணு கான முகுந்தா ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 2
கொடும்பாவி துரியோதனன்துர் சொல்கெட்டு மதிகெட்டுஎன்
கூந்தல்பற்றி இழுத்தாவந்தான் சபை நடுவில்பாவி துச்சாதனன்எனை
ஸோதரன் மனைவிஎன்றா மதித்தான்துஷ்டன் துரியோதனன்
அமரவாசொன்னான் தொடைமீதுதர்ம தேவதைநீகண்ணா பொத்திநின்றாய்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 3
கொடுமையோ கொடுமைகண்ணா சபைநடுவேஎன் துஹில்உரியஎனை
மறந்தேன்உனை சரண்புகுந்தேன் ஹரிஹரி நாராயணாஅந்த
பாதகனும்கை சோர்ந்துகீழ்விழ வண்ணசேலைபல குவித்துதள்ளிஎன்
உடல்மறைத்த க்ருஷ்ணா ஹரிஹரி நாராயணா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 4
(பீமன் ஸபதம்)
கண்களில்கனல் பொறிபறக்கபீமன் உளம்கொதித்து கர்ச்சித்தானா
ஆண்மையில்லா துரியோதனன் தொடைதனை பிளப்பேன்
துஹில்உரித்த துச்சாதனன்கை பிய்த்துகுருதி குடிப்பேன்
பீமன்என் சத்யவிரதம் காத்த மாதவாசரண்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 5
(அர்ச்சுனன் ஸபதம்)
என்நெஞ்சு பொறுக்குதில்லையே அக்ரமம்இதை கண்ணாரகாண
கண்ணாநின் பதம்ஆணை த்ரௌபதிகண் ணீர்ஆணைஎன்
காண்டீபவில் ஆணைபோரில் மாய்ப்பேன்அற்ப கர்ணனை
கைகொடுத்தாய் பார்த்தசாரதிஇந்த அர்ச்சுனன்சபதம் நிறைவேற
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 6
பாஞ்சாலி ஸபதம் (த்ரௌபதி ஸபதம்)
பாஞ்சாலிஎன் சபதஉரை செவிமடித்து கேட்பீர்என்
ஆடைகளைந்தான் ஒருபாவிதொடை அமர்என்றான் ஒருமூர்க்கன்அவர்
உடல்குருதிஎன் விரித்தகுழல்பூசி நெய்யாடிபின் முடிப்பேன்என்ற
என்வாக்கு பலிக்கசெய்த க்ருஷ்ணாஹரி ஹரிமுகுந்தாசரண்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)
சரணம் 7
தர்மஸாம் ராஜ்ய சக்ரவர்த்தி ப்ரபோசரண்
அஞ்ஞானம் துடைத்துமெய் ஞானம்தரும் ப்ரபோசரண்
சங்கர நாராயணாத்ரி லோகரக்ஷ்க்ஷ ப்ரபோசரண்
சங்கு சக்க்ர விஸ்வரூப பிரபோசரண்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(கைகொடுத்துஎன் மானம்காத்தாய்)