Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
குழந்தை வடிவில்வந்தாய் புன்னகைபூத்து எனைமயக்கினாய்
மழலைசொல்லில் எனைமறந்தேன் என்கண்மணியே விநாயகா ||
(குழந்தை)
அனுபல்லவி
முழுஒளிமதி திருமுகத்தில்என் முத்தமுத்திரை பதித்தேன்
தொழுதேன்நின் பட்டுகால்கள் தினம்தினம் தொட்டுதொட்டு ||
(குழந்தை)
சரணம் 1
ருத்ராட்சை கங்கணமோபிஞ்சு கைகளை அலங்கரிக்க
தண்டைகொலுசோ பஞ்சுகால்களை கொஞ்சிகொஞ்சி விளையாட
ரத்னமாலையோ நின்அழகுமார்பு கெஞ்சிகெஞ்சி தடவிடஎன்
கைஇரண்டும் சொடுக்கிசொடுக்கி திருஷ்டிகழித்து சங்கமமானேன் ||
(குழந்தை)
சரணம் 2
ரஸித்தேன்நீ தத்திதத்தி தளிர்நடை நடக்கஉளம்
நெகிழ்ந்தேன்நீ கையளைந்துபால் கொழக்கட்டை ருசிக்கசிந்தை
மகிழ்ந்தேன் எனக்காகநீ கானம்பாடி ஆடிடநெஞ்சம்
குளிர்ந்தேன்நீ கெஞ்சிபேசி விளையாடும் கொஞ்சலைகேட்டு ||
(குழந்தை)