1. பதக்கமலம் சரணம் ஹரிஹரி நாராயணா
   அருள்திரு அம்பிஹே ஸ்ரீலஷ்மிநிதம் வருடும்-திவ்ய ||(பதக்கமலம்)
2. உத்தமநாம கானகோஷ பக்தஜன கோடிப்ரே 
    மானந்த முகுந்தா கோவிந்தா கோவிந்தா-நின் ||(பதக்கமலம்) 
3. பலிதவம் மெச்சியோ மூன்றடிநிலம் யாசித்தாய் 
   நெடுமாலே வாமனா மூவுலகு அளந்தவனே-நின் ||(பதக்கமலம்) 
4. சாப விமோக்ஷ்க்ஷ மோஹன ரகுராமா 
   அகல்யைக்கு உளம்கனிந்து கல்லை மிதித்தவனே-நின் ||(பதக்கமலம்) 
5. பட்டாபிஷேகம் செய்து சிரம்பணிந்து கரம்குவித்து 
   சரண்புகுந்தான் பரதன் நீஅணிந்த திருபாதுகை-நின் ||(பதக்கமலம்) 
6. மீராக்கே ப்ரபோ ராதே கிரிதரா 
   ஆயர்குல ரக்ஷ்க்ஷகா காளிங்க நர்த்தனா ||(பதக்கமலம்) 
7. இல்லையென்னும் சொல்லறியா கொடைவள்ளல் கர்ணனுக்கு 
   தரிசனம் தந்த க்ருஷ்ணா விஸ்வரூபா-நின் ||(பதக்கமலம்) 
8. பெருமாளே பத்மநாபா பாக்யவான் ஆகாசராஜன் 
   நீர்கொண்டு நின்காலை கழுவிதுடைத்து தரிசித்த- நின் || (பதக்கமலம்)