Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
யாரினிஎனைத் தடுக்க தேடிவருவேன் சந்நிதி
பாரினில் பரிவுடன் எனையாளும் வினாயகா ||
(யாரினி எனைத் தடுக்க)
அனுபல்லவி
மாரியென திருவருளை வாரிவாரி அருள்வாயே
தரிசனம் தருவாய் திருவடி அபயம் ||
(யாரினி எனைத் தடுக்க)
சரணம் 1
கண்ணும் கருத்தும் நின்எண்ணம் சுழன்றாட
நாணம் துறந்தேன் நின்புகழ் பேசினேன்-மனம்
குணம்பெற துதிபாடி நன்னிலை அடைந்தேன்-கற்
கண்டே கனிரசம்நீ பருகுவேன் கானப்ரியா ||
சரணம் 2
வைத்யநாதன் மைந்தாஎன் மனநோய் நீங்கிட
வைத்தியம் செய்தும் பைத்தியம் நீங்கேன்
காரணி நீயென்று உணர்ந்துநான் செயலிழந்தேன்
தாரணி வெறுத்தேன் ஆரமுதே என்றழைத்தேன் ||
(யாரினி எனைத் தடுக்க)