பல்லவி
மங்களத் திருமுக செங்கமல பாதா
ஐங்கர வினாயகா ஜெயஜெயஜெய மங்களம் ||
(மங்களத் திருமுக)
அனுபல்லவி
சிங்க வாஹன அம்பிஹே பாலாஎன்
சித்தம் குடிகொண்ட துங்க கரிமுகா ||
(மங்களத் திருமுக)
சரணம்
ஞான வினாயகாஉன் த்யானத்தில் எனைமற ந்தேன்
கானம்பாடி உன்நினைவில் உளம்கரைந்து உருகினேன்
நாணம் துறந்தாடினேன் நின்புகழ்மகிமை கேட்டுகேட்டு
சரணடி புகுந்தேன்திரு கண்மலர்ந்து அருள்வாய்
(மங்களத் திருமுக)