Pallavi (Ragam : Bowla)
Thiruppalli yezhunthu- rak shippaai-Sidh dhiVinaayakaa
Krupaakaraa SaamaGana Sangeetha priyan-Baalaa ||
(Thiruppalli)
Anupallavi (Ragam : Bowla)
Narumana malar-thovi saambraani-thu bham-kaatti
Karpura aaraththi yeduththu-padha malar-varudineen ||
(Thiruppalli)
Charanam 1 (Ragam : Revathy)
Kasthuri thilakamittu ven-pat taadai
vasthiram saarththi modhagamum padaiththeen-veedha
saasthra swarupaa kalai-gjnaa niyee-un
daasanal lavaa-yendren rum-thiruvarul thantharulvaai ||
(Thiruppalli)
Charanam 2 (Ragam : Kirvaani)
Appanee Vinayakaa-yena adipaniyum adiyaarkku
arulamuthu thantharula thaamasam cheiyalaamaa
Shivashankari thava-selvaa Kailaasa vaasaa-Thiru
Chenthur Muruganpriya gajamuga Ganeeshaa ||
(Thiruppalli)
Charanam 3 (Ragam : Karaharapriya)
OmNamashivaa yaaOmNama shivaayaa-yendru thuthithu
Oru-kai-dee pam-yeenthi maru-kai- mani oli-yezhuppi
thumpikkaiyaal malar-thuvi eru-kai-lingam thazhuvum
ambhigai Baalaa Iingkara Vinayaka.
(Thiruppalli)
Charanam 4 (Ragam : Hamsanaatham)
Eniya-nal piravi-thanthaai naavaara unaippaada.
Eni-oru piravi-veendeen Siddhi Vinayaka.
Ninnarugu yendrumirunthu ninnazhagu rasiththu
Ninnadi pujai-cheiyum varam-yendrum thantharulvaai ||
(Thiruppalli)
பல்லவி (ராகம் : பௌளை)
திருப்பள்ளி எழுந்து- ரக்ஷ் க்ஷிப்பாய்-ஸித் திவினாயகா
க்ருபாகரா ஸாமகான ஸங்கீத ப்ரியன்-பாலா ||
(திருப்பள்ளி)
அனுபல்லவி (ராகம் : பௌளை)
நறுமண மலர்-தூவி சாம்ப்ராணி-தூ பம்-காட்டி
கற்பூர ஆரத்தி எடுத்து-பத மலர்-வருடினேன் ||
(திருப்பள்ளி)
சரணம் 1 (ராகம்: ரேவதி)
கஸ்தூரி திலகமிட்டு வெண்-பட் டாடை
வஸ்திரம் சார்த்தி மோதகமும் படைத்தேன்-வேத
சாஸ்த்ர ஸ்வரூபா கலை-ஞானி யே-உன்
தாஸனல்லவா என்றென்றும் திருவருள் தந்தருள்வாய் ||
(திருப்பள்ளி)
சரணம் 2 (ராகம்: கீர்வாணி)
அப்பனே வினயகா-யென அடிபணியும் அடியார்க்கு
அருளமுது தந்தருள தாமஸம் செய்யலாமா
சிவசங்கரி தவ-செல்வா கைலாச வாசா-திரு
செந்தூர் முருகன்ப்ரிய கஜமுக கணேசா ||
(திருப்பள்ளி)
சரணம் 3 (ராகம்: கரஹரப்ரியா)
ஓம் நமசிவா யாஓம் நம சிவாயா-யென்று துதித்து
ஒரு-கை-தீ பம்-ஏந்தி மறு-கை- மணி ஒலி-யெழுப்பி
தும்பிக்கையால் மலர்-தூவி இரு-கை-லிங்கம் தழுவும்
அம்பிகை பாலா ஐங்கர வினாயகா
(திருப்பள்ளி)
சரணம் 4 (ராகம்: ஹம்ஸ நாதம்)
இனிய-நல் பிறவி-தந்தாய் நாவார உனைப்பாட.
இனி-ஒரு பிறவி-வேண்டேன் ஸித்தி வினாயகா.
நின்னருகு யென்றுமிருந்து நின்னழகு ரசித்து
நின்னடி பூஜை-செய்யும் வரம்-யென்றும் தந்தருள்வாய் ||
(திருப்பள்ளி)