Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
பரம தயாள கருணா மூர்த்தியே
மனமிரங்கி அருள்வாய் கஜமுக விக்னராஜா
(பரம தயாள)
அனுபல்லவி
எருக்கம்புல் மாலைதவழ் கனகதிரு மேனியா
சங்கீத போஜன ஆனந்த நர்த்தனா
சொல்கட்டு சிட்டாஸ்வரம்
சங்கீத போஜன | மா , பா தா ப | , தா நி ப த நி ஸ ||
கரிஸ - ரிஸநி - ஸநித - நிதப - மபதநி | ஸநி , தபம தப | , மகரி கமபத ||
சங்கீத போஜன | ஆனந்த | நர்த்தனா ||
தத்தீம் ததீம் தீம்த | தஜனு திமித நாத்ரு | தானிதொம் தொந்த்ரு தானிதொம் ||
த்ருத்ருதொம் த்ருத்ருதொம் ததிங்கிணதொம் | ஆனந்த | நர்த்தனா ||
(பரம தயாள)
சரணம்
போதும்போதும் என்றமனம் எனக்கில்லை ஐயா
பேராசைமிகக் கொண்டேன்நின் அருள்செல்வம் நிதம்வேண்டி
பித்தனாகி பேயனாகி திருநாமம் ஸ்மரணம்செய்தேன்
தீனனென்று ஒதுக்காதே நாதகான லோலா
சொல்கட்டு சிட்டாஸ்வரம் ||
(பரம தயாள)