பல்லவி
ஆலிங்கனமா செய்தாய் வலிதந்துஎனை கட்டிபிடித்துபின்
களைப்பு தீர்ந்தாயோஆல மரத்தடி அமர்ந்துவினாயகா ||
(ஆலிங்கனமா செய்தாய்)
அனுபல்லவி
கலியுக வரதாநின் அருள்திருநாமம் ஒன்றுமட்டும்
ஒலிக்ககேட்டு மெய்மறந்து கரம்குவிக்கும் அடியேன்எனை ||
(ஆலிங்கனமா செய்தாய்)
சரணம் 1
பீலிசூடும் கண்ணன்ப்ரேம கௌரி சுதா
புலிவாகனன் ஸோதரன் ஐயப்பன் நேயா
பவ்யமாய் ஸேவித்தேன்என் கவசமாய் நின்நாமம்
அனுக்ரக தயாளாஎன் அன்பின் சிகரமே ||
(ஆலிங்கனமா செய்தாய்)
சரணம் 2
திவ்யஸ்வரூப ஸத்குருவே ஸங்கட ஸம்ஹாரா
என்குலமணி மகுடசிவ சக்திதவ செல்வமணியே
அருள்மணியே ராக ரத்னஆர சிகாமணியே
கானகோஷ நாதமணியேஎன் ஹ்ருதயசுடர் ஒளிமணியே ||
(ஆலிங்கனமா செய்தாய்)