Pallavi
Ragam : Kalyaani
Vinayagan thiruvaruLaal alaikalai malaimagaLudan
AdiPaadi kummiyatikka ennathavam cheithoam-ammaa ||
(Vinayagan)
Charanam
1.  Ragam : Kalyaani.  
Vinoadha arpudha SaamaGana rasihae-muththu
maalai asaiya kaivaLai kulunga
kaalchilampu konja punnakai malara
Anandha thaaNta van-pukaz paadi
   "JeyaJeya HaraHara OmNama Shivaaya
    JeyaJeya HaraHara ShivaShiva Shankara
    JeyaJeya HaraHara Shankara MahaDeva
    JeyaJeya HaraHara Gowri Shankara-ena" ||
(vinaayagan)
Charanam 2 	
Ragam : Gowlai  
Purnachandhra vadhana srungaara Mohini
maekalai asaiya kuntalam aada
kuru nakai chinthi munnum pinnum
kunthal neLiya HariGanam nidhampaadi
   "HariHari Govindha Sathya NarayaNa
    HariHari Govindha achchudhaa kaesavaa
    HariHari Govindha PaaNturanga vittala
    HariHari Govindha mukuntha muraari-ena" ||
(Vinayagan)
Charanam 3
	
Ragam : KeervaaNi
Ambhihae Sangeetha rasihae-Saras wathi-pattu
putavai sarasarakka otyaanam paLaPaLakka
neRRi thavazum kuzalkonji viLaiyaada
natanam Adi Ganam paadi
   “SukuNa Manohari JeyaJeya Eswari
    Sakalakalaa vaani JeyaJeya Eswari
    Sathguru Sri.Devi JeyaJeya Eswari
    Sathya loakavaasi JeyaJeya ena-paadi" ||
(Vinayagan)
            
பல்லவி
ராகம் : கல்யாணி
வினாயகன் திருவருளால் அலைகலை மலைமகளுடன்
ஆடிபாடி கும்மியடிக்க என்னதவம் செய்தோம்-அம்மா ||
(வினாயகன்)
சரணங்கள்
1.  ராகம்: கல்யாணி.  
விநோத அற்புத சாமகான ரஸிஹே-முத்து
மாலை அசைய கைவளை குலுங்க
கால்சிலம்பு கொஞ்ச புன்னகை மலர
ஆனந்த தாண்ட வன்-புகழ் பாடி
   "ஜெயஜெய ஹரஹர ஓம்நம சிவாய
    ஜெயஜெய ஹரஹர சிவசிவ சங்கர
    ஜெயஜெய ஹரஹர சங்கர மஹாதேவா
    ஜெயஜெய ஹரஹர கௌரி சங்கர-என" ||
 (வினாயகன்)
2.  ராகம்: கௌளை  
பூர்ணசந்த்ர வதன ஸ்ருங்கார மோஹினி
மேகலை அசைய குண்டலம் ஆட
குருநகை சிந்தி முன்னும் பின்னும்
கூந்தல் நெளிய ஹரிகானம் நிதம்பாடி
   "ஹரிஹரி கோவிந்த சத்ய நாராயண
    ஹரிஹரி கோவிந்த அச்சுதா கேசவா
    ஹரிஹரி கோவிந்த பாண்டுரங்க விட்டல
    ஹரிஹரி கோவிந்த முகுந்த முராரி-என" ||
(வினாயகன்)
3.  ராகம்: கீர்வாணி
அம்பிஹே சங்கீத ரஸிஹேஸரஸ் வதி-பட்டு
புடவை சரசரக்க ஒட்யாணம் பளபளக்க
நெற்றி தவழும் குழல்கொஞ்சி விளையாட
நடனம் ஆடி கானம் பாடி
   "சுகுண மனோஹரி ஜெயஜெய ஈஸ்வரி
    சகலகலா வாணி ஜெயஜெய ஈஸ்வரி
    சத்குரு ஸ்ரீ.தேவி ஜெயஜெய ஈஸ்வரி
    சத்ய லோகவாஸி ஜெயஜெய எனபாடி" ||
(வினாயகன்)