Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி.
நலம்தந்து எனைக்காக்க நிதம்நீ வரவேண்டும்-உனை
வலம்வந்து சரண்புகுந்தேன் சக்திமிகு வினாயகா ||
அனுபல்லவி.
குலமணி திலகமே கலைமா மணியே
கோல மாமணியே பக்த சிஹாமணியே
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
வக்ரதுண்ட விக்னராஜா ப்ரும்ம சாரியே
துரித வித்யாவீர ஸர்வஸித்தி கணபதே ||
சரணம்.
சொப்பன உலகில் தப்பாமல்நீ நிதம்வந்து
அடியேன் மெய்களிக்க கானம்பல பாடுகின்றாய்
அப்பனேஎன் அப்பனே பிள்ளையார் அப்பனே
என்நிதியே குணசீலா கருணா ஸாகரா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
வக்ரதுண்ட விக்னராஜா ப்ரும்ம சாரியே
துரித வித்யாவீர ஸர்வஸித்தி கணபதே ||