Pallavi
Narayanaa Lakshmi Narayanaa-Unai
Aaraadhanai cheitheen thiruvarul thaaraai ||
(Narayanaa Lakshmi Narayanaa)
AnuPallavi
Thunaiyum nizhalum ne-yentru nimbi-un
Enaiyati panindheen Gana priyaa
“HariHari JeyaJeya Narayanaa LakshmiNarayanaa
Harihari JeyaJeya Madhavaa YaadhavaaMukunthaa”
(Narayanaa Lakshmi Narayanaa)
Charanam - 1
Nediyonee ninnadi neesam-migak konteen
Neerizhai yenai-vittu akalaathee niththam
Nin-naamam jebhiththu yenai-marantheen Iyanee-yen
Ninaivil natamaadum SeethaLakskmi Priyaa
“HariHari JeyaJeya Narayanaa LakshmiNarayanaa
HariHari JeyaJeya Madhavaa YaadhavaaMukunthaa”
(Narayanaa Lakshmi Narayanaa)
Charanam - 2
Deva-kanni esai-pozhiya Deva-maadhar natamaada
Devarulagil niththam aanantha-unjal aaduraayo
Devaamrutham parugi thaambulam tharikkum-Seetha
Lakshmi Narayanaa vaikunta vaasaa
“HariHari JeyaJeya Narayanaa LakshmiNarayanaa
HariHari JeyaJeya Madhavaa YaadhavaaMukunthaa”
(Narayanaa Lakshmi Narayanaa)
பல்லவி
நாராயணா லக்ஷ்மி நாரா யணா-உனை
ஆராதனை செய்தேன் திருவருள் தாராய் ||
(நாராயணா லக்ஷ்மி நாராயணா)
அனுபல்லவி
துணையும் நிழலும் நீ-என்று நம்பி-உன்
இணையடி பணிந்தேன் கான பிரியா
"ஹரிஹரி ஜெயஜெய நாராயணா லக்ஷ்மி நாராயணா
ஹரிஹரி ஜெயஜெய மாதவா யாதவாமுகுந்தா" ||
(நாராயணா லக்ஷ்மி நாராயணா)
சரணம் 1
நெடியொனே நின்னடி நேசம்-மிகக் கொண்டேன்
நேரிழை எனை-விட்டு அகலாதே நித்தம்
நின்-நாமம் ஜெபித்து எனை-மறந்தேன் ஐயனே-என்
நினைவில் நடமாடும் சீதாலக்ஷ்மி பிரியா
"ஹரிஹரி ஜெயஜெய நாராயணா லக்ஷ்மி நாராயணா
ஹரிஹரி ஜெயஜெய மாதவா யாதவாமுகுந்தா" ||
(நாராயணா லக்ஷ்மி நாராயணா)
சரணம் 2
தேவ-கன்னி இசை-பொழிய தேவ-மாதர் நடமாட
தேவருலகில் நித்தம் ஆனந்த-ஊஞ்சல் ஆடுறாயோ
தேவாம்ருதம் பருகி தாம்பூலம் தரிக்கும்-ஸீதா
லக்ஷ்மி நாராயணா வைகுண்ட வாசா
"ஹரிஹரி ஜெயஜெய நாராயணா லக்ஷ்மி நாராயணா
ஹரிஹரி ஜெயஜெய மாதவா யாதவாமுகுந்தா" ||
(நாராயணா லக்ஷ்மி நாராயணா)