Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
Vinaayagar Sthuthi,second time the whole world is lock down due to Corona Virus.
Year 2020, it is completely shut down from March 2020.
பல்லவி
ராகம் : ஹிந்தோளம்
விரைந்து வா-எமைக் காக்கவா விநாயகா-கொடும்
நோய்தொல்லை இனிபோதும் லோகஜீவ ரக்ஷ்க்ஷகா
"என்-அபிமானியே அபயம் சித்தி கணபதே" ||
(விரைந்து வா)
அனுபல்லவி
ராகம் : வலசி
கனகமேனி குளிர்ந்திட ஸங்கீத மலர்தொடுத்து
ராகரத்ன மாலைசூட்டி பதமலர் சரண்புகு ந்தேன்
"அபார உபகார சக்தி கணபதே" ||
(விரைந்து வா)
சரணம் 1
ராகம் : பாஹேஸ்ரீ
கோவிலாய்-நீ மாற்றினாயோ-யாம் குடியிருக்கும் இல்லமதை-நாளும்
கானம்பாட அருளினாயோ த்யானதீபம் தூண்டி
விஞ்ஞானம் அஞ்ஞானம் மிகுந்த லோகம்தன்னில்
மெய்ஞானம் தந்தாயோ தெய்வீகசக்தி தன்அருமை
"பாபசாப விமோக்ஷ்க்ஷா உக்ர கணபதே" ||
(விரைந்து வா)
சரணம் 2
ராகம் : காபி
விதியின் கொடுமையை இனிதாங்கும்சக்தி எமக்கில்லை
கதிகலங்கச் செய்தாயோ இந்த-இருபதாம் நூற்றாண்டு
வேடிக்கைப் பார்த்தது இனிப்போதும் விநாயகா
விடிவுகாலம் வேண்டி தண்டனிட்டேன் இணையடி
"அனுக்ரக தயாளா விக்ன கணபதே"
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
அனுக்ரக தயாளா விக்ன கணபதே
பாபசாப விமோக்ஷ்க்ஷா உக்ர கணபதே
அபார உபகார சக்தி கணபதே
என்-அபிமானியே அபயம் சித்தி கணபதே
(விரைந்து வா)