Pallavi
PaaNduranga vittala Padhmanaabha vittala
Bhaktharukku aruLpuriyum Gana priyonae ||
(PaaNduranga vittala)
Anupallavi
Paamaalai chuuttiyaemana nimmadhi adaindhaenae
Paadhaaram podhumenRu paadinaen anudhinam ||
(PaaNduranga vittala)
CharaNam
Bhakthiyin perumaiyai ulakiRku uNarththavae
Sakkubhaaikku aruLthanthu thuuNilkat tuppattaai
PiththanenRu paeyanenRu yevarennai yesinaalum
Thiththikkum thirunaamam poaRRiyae thuthippaenae ||
(PaaNduranga vittala)
பல்லவி
பாண்டுரங்க விட்டல பத்மநாப விட்டல
பக்தருக்கு அருள்புரியும் கான ப்ரியோனே ||
(பாண்டுரங்க விட்டல)
அனுபல்லவி
பாமாலை சூட்டியேமன நிம்மதி அடைந்தேனே
பாதாரம் போதுமென்று பாடினேன் அனுதினம் ||
(பாண்டுரங்க விட்டல)
சரணம்
பக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே
சக்குபாய்க்கு அருள்தந்து தூணில்கட் டுப்பட்டாய்
பித்தனென்று பேயனென்று எவரென்னை ஏசினாலும்
தித்திக்கும் திருநாமம் போற்றியே துதிப்பேனே ||
(பாண்டுரங்க விட்டல)