Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ராகம் : குந்தளவராளி
தோழியர் ஒன்றுகூடி கும்மியடிப் போம்வாரீர்
தண்மதி வதன வள்ளியோடு வளைகுலுங்க ||
(தோழியர்)
சரணம் 1
தும்பிக்கை நாதனின் ஸோதரனாம் கந்தன்
துயரினைக் களைந்திடும் கலியுக தெய்வமவனை
"வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா வேல்வேல்
வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா என்றுபாடி" ||
(தோழியர்)
சரணம் 2
ராகம் : நாட்டை
நெற்றிக்கண் சுடரிலே தோன்றிய பாலனை
கார்த்திகேய பெண்களின் வளர்ப்பு மகனை
"வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா வேல்வேல்
வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா என்றுபாடி" ||
(தோழியர்)
சரணம் 3
ராகம் : சுபபந்துராளி
வேல்விழி யானின் திருமேனி வடிவில்
வல்லிக்கொடி வள்ளி மயங்கிய திறம்சொல்லி
"வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா வேல்வேல்
வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா என்றுபாடி" ||
(தோழியர்)
சரணம் 4
ராகம் : பௌளை
பக்தர் உள்ளம்வாழ் கருணை வள்ளலை
சக்தியின் உள்ளம்கவர் செல்ல மகனை
"வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா வேல்வேல்
வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா என்றுபாடி" ||
(தோழியர்)
சரணம் 5
ராகம் : காபி
ஆறுமுகப் பெருமானவன் அருளமுது பெற்றிட
அனுதினம் ஹரோஹரா என்று துதித்து
"வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா வேல்வேல்
வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா என்றுபாடி" ||
(தோழியர்)
சரணம் 6
ராகம் : சிந்துபைரவி
ஞானப் பழமவன் பஞ்சாம்ருத பிரியன்
கான ப்ரியனவன் வள்ளிமனம் கவர்கள்வன்