Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
அருள்மழை கிட்டாதுநான் அவதியுற்றேன் அம்மா
அனுதினம் உன்னையே சரணடைந்த எனக்குஉன் ||
(அருள்மழை)
அனுபல்லவி
அன்பின் வடிவே ஆரமுதே உன்னை
அல்லும் பகலும்நான் தொழுதுநின்றேன் அம்மா
சிட்டாஸ்வரம்
அருமந்த மருந்தானாய் கண்குளிர்நல் விருந்தானாய்-மன
இருள்நீக்கி அருள்தந்தாய் குங்கும ஸ்ருங்காரி
சங்குநாதம் முழங்கி சங்கமம் ஆனேன்
அருங்கலை வினோதினி அகிலாண் டேஸ்வரி ||
(அருள்மழை)
சரணம்
அறத்தினை பூவுலகில் வளர்த்திடும் தாயே
அகிலாண்ட நாயகிஎனும் நாமத்தைக் கொண்டாய்
அபயமென் றண்டிவந்தேன் அருள்தர தாமதமேன்
அடியாளுக் கிரங்கி கானப்ரியே வருவாயே
சிட்டாஸ்வரம் ||
(அருள்மழை)