Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ராதா கிருஷ்ணா முரளி கிருஷ்ணா
ஆதாரம் நீஎன்று பாதாரம் சரணென்றேன் ||
(ராதா கிருஷ்ணா)
அனுபல்லவி
திருவடி அருளொன்றில் நம்பிக்கை வைத்தேன்-கண்ணா
தேறும்வழி நானடைய நீயேதுணை ஐயா
"ப்ருந்தாவன லோலா கானப்ரிய சீலா
பாண்டுரங்க விட்டல ஜெயஜெய விட்டல" ||
(ராதா கிருஷ்ணா)
சரணம்
கண்கூடாய் நின்னருள் நான்காண அருள்வாய்
கண்கண்ட தெய்வமென மெய்ப்பித்து காட்டுவாய்
ப்ருந்தாவன மண்ணைஎன் மெய்யினில் பூசியே
புளங்கிதம் அடைந்தேன் ராதாப்ரிய கிருஷ்ணா
"ப்ருந்தாவன லோலா கானப்ரிய சீலா
பாண்டுரங்க விட்டல ஜெயஜெய விட்டல" ||
(ராதா கிருஷ்ணா)