Pallavi
Kaavendru kathari-nintreen Kaaththiduvaai Amma
Paavondru paadi-vandheen paaraamugam yeeno ||
(Kaavendru)
AnuPallavi
Karunai katalee arutperum jothiyee-ulam
Karainthu urugi-nintreen unthan arul-pera ||
(Kaavendru)
Charanam
Padha-malarai yendrum siramathil chudineen
Paadhaara vinthamee kathi-yendru nambhi-vandheen
Sothanai pothum-yen veedhanai theerppaai
Samayaththil varuvaai Ganapriyee arulvaayee ||
(Kaavendru)
பல்லவி
காவென்று கதறி நின்றேன் காத்திடுவாய் அம்மா
பாவொன்று பாடி-வந்தேன் பாராமுகம் ஏனோ ||
(காவென்று)
அனுபல்லவி
கருணைக் கடலே அருட்பெரும் ஜோதியே-உளம்
கரைந்து உருகி-நின்றேன் உந்தன் அருள்-பெற ||
(காவென்று)
சரணம்
பத-மலரை யென்றும் சிரமதில் சூடினேன்
பாதார விந்தமே கதி-யென்று நம்பி-வந்தேன்
ஸோதனை போதும்-என் வேதனை தீர்ப்பாய்
ஸமயத்தில் வருவாய் கானப்ரியே அருள்வாயே ||
(காவென்று)