Pallavi
1.
Ragam: Hamsaanandhi
KaNNaa kuzalGanam kaettu Odivandhaen
maNNuNda vaayonae Yasothaiyin puthalvaa ||
(KaNNaa)
CharaNams
2.
ThaNmadhi mugamum kamalakkaNNa zakumkaNtu
PaNNisaiththup paadiAdi ennaiyae maRandhaen
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare” ||
(KaNNaa)
3.
Ragam: Thilang.
KaLLamaai meLLa-meLLa piRar-aRiyaathu vandhaai
aLLi-aLLi veNNaiyuNtu thozarukkum kotuththaai
"KrishNa KrishNaa Mugundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
4.
Ragam: Sinthubhairavi.
Yamunaa thiiraththil KaaLinga paampinai
atakkiyae Ayarpaadi makkaLaik kaaththavanae
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
5.
Ragam: VanthanathaariNi.
Pullaangu zalisaiyil Gopiyarai mayakkiyae
Thollaimigu kuRumpucheidhu Gopiyaraik kavarnthaai
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
6.
Ragam: Ranjani.
Bhama RukmiNi manangavar Maayonae
Paadha kamalaththaal ulakaLantha Maayonae
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
7.
Ragam: HindhoaLam.
Vandhanai cheidhaen yaendhalae ninnaruLthaa
VaeNuGana priyaa Girithara Gopaalaa
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
8.
Ragam: Suritti.
AlaimagaLai thirumaarpil thaangiya naadhaa
Araththi yaetuththunakku mangaLam paadinaen
"KrishNa KrishNaa Mukundhaa Janaarththanaa
KrishNa Govindha Narayana Hare" ||
(KaNNaa)
பல்லவி
1.
ராகம்: ஹம்ஸானந்தி.
கண்ணா குழல்கானம் கேட்டு ஓடிவந்தேன்
மண்ணுண்ட வாயோனே யசோதையின் புதல்வா ||
(கண்ணா)
சரணங்கள்
2.
தண்மதி முகமும் கமலக்கண்ண ழகும்கண்டு
பண்ணிசைத்துப் பாடிஆடி என்னையே மறந்தேன்
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
3.
ராகம்: திலங்க்.
கள்ளமாய் மெள்ளமெள்ள பிறர்-அறியாது வந்தாய்
அள்ளி-அள்ளி வெண்ணையுண்டு தோழருக்கும் கொடுத்தாய்
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
4.
ராகம்: ஸிந்துபைரவி.
யமுனா தீரத்தில் காளிங்க பாம்பினை
அடக்கியே ஆயர்பாடி மக்களைக் காத்தவனே
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
5.
ராகம்: வந்தனதாரணி.
புல்லாங்கு ழலிசையில் கோபியரை மயக்கியே
தொல்லைமிகு குறும்புசெய்து கோபியரைக் கவர்ந்தாய்
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
6.
ராகம்: ரஞ்சனி.
பாமா ருக்மிணி மனங்கவர் மாயோனே
பாத கமலத்தால் உலகளந்த மாயோனே
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
7.
ராகம்: ஹிந்தோளம்.
வந்தனை செய்தேன் ஏந்தலே நின்னருள்தா
வேணுகானப் பிரியா கிரிதர கோபாலா
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)
8.
ராகம்: சுருட்டி.
அலைமகளை திருமார்பில் தாங்கிய நாதா
ஆரத்தி எடுத்துனக்கு மங்களம் பாடினேன்
"க்ருஷ்ண க்ருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே"
(கண்ணா)