Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
லோகக்ஷேம ரக்ஷ்க்ஷகி ஸ்ரீபுவ னேஸ்வரி
ஸாமகான ரஸிஹே மங்கள நீராஞ்சனம் ||
(லோகக்ஷேம ரக்ஷ்க்ஷகி)
அனுபல்லவி
ஜெகஜோதி ஜெகத்குரு என்கண்கண்ட ஜெகதீஸ்வரி
அம்பிஹே மஹேஸ்வரி கற்பூர ஆரத்தி ||
(லோகக்ஷேம ரக்ஷ்க்ஷகி)
சரணம்
நாகாபரண சங்கரன் ஆனந்த தாண்டவப்ப்ரியே
நித்யசுக போக திவ்ய ஸ்வரூபி
நித்தமும் என்சித்தம் அமர்ந்துஎனை பித்தனாக்கும்
அமிர்த வல்லி மங்களதீப ஆரத்தி ||
(லோகக்ஷெம ரக்ஷ்க்ஷகி)