Pallavi
Ganam naanpaada Radhai kuzhaluudha
Anandha nadanam AduNii KaNNaa ||
charaNam 1
Punnai maraththadiyil RadhaiNaan unaiththaeda
Punnagai cheidhuNii pinninRu chiiNdinaai
Innisaip parugida Miraa illamchenRaai
Yennilai puriyaadhu thollaiNii tharukinRaai ||
charaNam 2
Thannaiyae maRandhuUn yeNNaththil thiLaikkum
Annai Yesodhai cheithaththavam yaatho
InnadithuNai KaNNaavaein guzhalGana Anandhaa
Ninmanam kaniyaadho innaruL thandhida ||
பல்லவி
கானம் நான்பாட ராதை குழலூத
ஆனந்த நடனம் ஆடுநீ கண்ணா ||
சரணம் 1
புன்னை மரத்தடியில் ராதைநான் உனைத்தேட
புன்னகை செய்துநீ பின்னின்று சீண்டினாய்
இன்னிசைப் பருகிட மீராஇல் லம்சென்றாய்
என்னிலை புரியாது தொல்லைநீ தருகின்றாய் ||
சரணம் 2
தன்னையே மறந்துஉன் எண்ணத்தில் திளைக்கும்
அன்னை யசோதை செய்தத்தவம் யாதோ
இன்னடிதுணை கண்ணாவேய்ங் குழல்கான ஆனந்தா
நின்மனம் கனியாதோ இன்னருள் தந்திட ||