Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
இரங்கா யோ-மனம் இரங்காயோ காந்தள்
கரத்தினால் அணைத்து-மன ஆறுதல் அளித்திட ||
(இரங்காயோ)
அனுபல்லவி
சிரமீது திருவடியைத் தாங்கி நின்று-எந்
நேரமும் உந்தனை நினைந்துருகும் ஏழையிடம் ||
(இரங்காயோ)
சரணம் 1
சங்கொலி கேட்டிட திருக்கோயில் அடைந்தேன்
சிங்கமீ தமர்ந்து-உன் திருக்காட்சி கண்டேன்
பங்கய திருவடி திருவழகை ரசித்தேன்
கங்கை முடிதாங்கும் ஈசனின் கானப்ரியே ||
(இரங்காயோ)
சரணம் 2
ஜன்மம் எடுத்தது போதுமே போதும்-இச்
ஜன்மம் நாளும்-உனை துதித்திட அருள்வாய்
பிறவிப் பெருங்கடல் தாண்டிட அருள்வாய்-இனி
பிறவா பேரின்பம்-நான் அடைந்திட அருள்வாய் ||
(இரங்காயோ)