Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
தொழுதேன் ஐயனே கமலத் திருவடி
எழுவாய் ஐயனேஎன் இதயக் கமலம் ||
(தொழுதேன் ஐயனே)
ஆழ்வார்கள் பாசுரப்ரேம ஆலிலை கண்ணா
ஆயர்குல மாயவனே வேணுகான ப்ரியோனே
சாஹித்ய சிட்டாஸ்வரம்
தஜ்ஜம்-ஜம்ததீம் தகிடதீம் தளாங்குதகதீம் ஜணுததீம்
ஜதியோடு லயமோடு கிண்கிணிபாத சலங்கைஒலியோடு
கால்மாறி பதம்தூக்கி நர்த்தனமாடும் கண்ணா
கார்மேக வண்ணா பாலக் க்ருஷ்ணா
(தொழுதேன் ஐயனே)
சரணம்
நலமான வாழ்வு தந்தெமை ஆள்வாய்
காலமும் நின்னடி ஸேவிக்க அருள்வாய்
மணமிகு பாமாலைநான் சூட்டிட அருள்வாய்
மணமிகு பாமாலைநிதம் சூட்டிட அருள்வாய்
மணமிகு பாமாலை உனக்குசுட்டும் வரம்தருவாய்
அணங்கு என்எண்ணம் நிறைவேற அருள்வாய்
சாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(தொழுதேன் ஐயனே)