Pallavi
Ganapathi paerkaettaen meychilirththaen aiyaa-avan
Gunam-kaettu kantita thutiththaen aiyaa ||
(Ganapathi)
Anupallavi
Thunaiyaaki atiyavarkku uthavum meyyan-aiyaa
inaiyaethum illai-avan thiruvatikku aiyaa ||
(Ganapathi)
Charanam 1
Anpu vaentum-avan kanivu vaentum- ena
enrum inai-ati thozhuthaen aiyaa
thuthikal naavaara en naalum paatiyae
Daasanaai paninthita vaentum aiyaa ||
(Ganapathi)
Charanam 2
Vanni-eilai arukkampul priyanavan aiyaa
annaiyar Siddhi Puththi naayakanavan aiyaa
ennullam kutikonta Ganapriyan aiyaa
kannithTamiz maalai nitham chuuttinaen aiyaa ||
(Ganapathi)
பல்லவி
கணபதி பேர்கேட்டேன் மெய்சிலிர்த்தேன் ஐயா-அவன்
குணம்கேட்டு கண்டிட துடித்தேன் ஐயா ||
(கணபதி)
அனுபல்லவி
துணையாகி அடியவர்க்கு உதவும் மெய்யன்-ஐயா
இணையேதும் இல்லைஅவன் திருவடிக்கு ஐயா ||
(கணபதி)
சரணம் 1
அன்பு வேண்டும்-அவன் கனிவு வேண்டும் என
என்றும் இணைஅடி தொழுதேன் ஐயா
துதிகள் நாவார எ ந் நாளும் பாடியே
தாஸனாய் பணிந்திட வேண்டும் ஐயா ||
(கணபதி)
சரணம் 2
வன்னி இலை அருக்கம்புல் ப்ரியனவன் ஐயா
அன்னையர் சித்திபுத்தி நாயகனவன் ஐயா
என்னுள்ளம் குடிகொண்ட கானப்ரியன் ஐயா
கன்னித்தமிழ் மாலை நிதம் சூட்டினேன் ஐயா ||
(கணபதி)