Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
வரம்வேண்டி சரண்புகுந்தேன் பகவானே புதபகவானே
கருணா ஸாஹரா ஞானவித்யா காரா ||
(வரம் வேண்டி)
அனுபல்லவி
சிரம்பணிந்தேன் ஆதிசிதம்பர திருவெண்காடு ஸ்தலவாஸா
தாரா சந்த்ரன் மோஹ செல்வா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
மரகத பதக்கம் வெண்காந்தள் மலர்தவழ்
பச்சைவர்ண வஸ்த்ர குதிரை வாகனா
மிதுன கன்னிராஸி தேவாதி தேவா
பச்சை(பாசி)பயிறு நிவேதனப்ரிய ரிக்வேத அதிபதியே ||
(வரம் வேண்டி)
சரணம் 1
கடுந்தவம் செய்தாயோ ஸ்வேதாரண்யர் அருள்கிட்ட-நின்
புகழ்கானம் பாடினாரோ சைவசமய குரவர்நால்வர்
பதினேழுநாள் பதினேழு தீபம்ஏற்றி உனைதொழுதேன்
த்ரிதீர்த்த த்ரீவிருட்ச ருத்ரகயா வாஸா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(வரம் வேண்டி)
சரணம் 2
நீயேகதி ப்ரபோஎம் கல்விகலை நிதம்ஓங்க
நீயேகதி ப்ரபோ நாளும் ஆரோக்ய நலம்பெற
நீயகதி ப்ரபோஎம் தொழில் நுட்பம் நாளும்வளர
நீயேகதி ப்ரபோநிதம் கண்ணிரங்கி நீஅருள்வாய்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(வரம் வேண்டி)