Pallavi.
YEzhai-naan bhaaramaa chol kaNNaa
ennalpala ezhaiththu vaattiyadhu podhumappaa ||
(YEzhainaan Bhaaramaa)
Anupallavi
kuzhaindhen uLLam azhaiththaen yenarugu
vizhaindhen-nin aruLpeRa suuttinen Ganamaalai ||
(YEzhainaan Bhaaramaa)
charaNam.
kazhaikkuuththaadi pol-yenai thavikka cheidhaai
pizhaiyethu cheithaalum thiruththuvadhu un-kuNamallavaa
ezhippiRappu thanthavan niiyallavoa cholluvaai
kazhivirakkam ellaiyaa paedhai yennidam ||
(YEzhainaan Bhaaramaa)
பல்லவி.
ஏழைநான் பாரமா சொல் கண்ணா
இன்னல்பல இழைத்து வாட்டியது போதுமப்பா ||
(ஏழைநான் பாரமா)
அனுபல்லவி
குழைந்தேன் உள்ளம் அழைத்தேன் என்அருகு
விழைந்தேன்-நின் அருள்பெற சூட்டினேன் கானமாலை ||
(ஏழை நான் பாரமா)
சரணம்.
கழைக்கூத்தாடி போல்-எனை தவிக்க செய்தாய்
பிழையேது செய்தாலும் திருத்துவது உன்-குணமல்லவா
இழிப்பிறப்பு தந்தவன் நீயல்லவோ சொல்லுவாய்
கழிவிரக்கம் இல்லையா பேதை என்னிடம் ||
(ஏழைநான் பாரமா)