Pallavi
Thaayaippoal oruperun Deivam kaNtathillai
ThayaikkuNam niRainthaoru thanipperun Deivamaiyaa ||
(Thaayaippoal oru perunDeivam)
Anupallavi
iinRavaL enRumae thannalam aRiyaaL-enai
iinRavaL enRumae thannalam aRiyaaL
iinRillai enRaalum Deivamaai aruLvaaL ||
(Thaayaippoel oru perunDeivam)
CharaNam
iRaivan thiruppadham Sangamam aanaalum
uRaikiRaaL manasannithi anpuru vaanavaL
Sangadam thudaiththitum Ganapriya thaayavaL
pangaya thiruvadi aathaaramena paNinthaen ||
(Thaayaippoel oru perunDeivam)
பல்லவி
தாயைப்போல் ஒருபெருந் தெய்வம் கண்டதில்லை
தயைக்குணம் நிறைந்தஒரு தனிப்பெருந் தெய்வமைய்யா ||
(தாயைப்போல் ஒரு பெருந்தெய்வம்)
அனுபல்லவி
ஈன்றவள் என்றுமே தன்னலம் அறியாள்-எனை
ஈன்றவள் என்றுமே தன்னலம் அறியாள்
இன்றில்லை என்றாலும் தெய்வமாய் அருள்வாள் ||
(தாயைப்போல் ஒரு பெருந்தெய்வம்)
சரணம்
இறைவன் திருப்பதம் ஸங்கமம் ஆனாலும்
உறைகிறாள் மனசன்னிதி அன்புரு வானவள்
ஸங்கடம் துடைத்திடும் கானப்ரிய தாயவள்
பங்கய திருவடி ஆதாரமென பணிந்தேன் ||
(தாயைப்போல் ஒரு பெருந்தெய்வம்)