Pallavi
kunRamellaam viiRRitum kumaranukku mangaLam
kuRavaLLi uLLangavar kaLvanukku mangaLam ||  
(kunRamellaam)
Anupallavi
	
kuvaLaik kaNNanaam vaelanukku Soepanam
kunjari maNaaLanukku kanthanukku Soepanam  || 
(kunRamellaam)
CharaNam 1
thuLLal nataipayinRu vaetanaai vanthavan 
vaLLiGanam paruki thannaiyae izanthavan
vinaikaLaik kaLainthitum Devasaenaa pathiyavan
Yanaimugan aruLaal vaLLikaram paRRiyavan || 
(kunRamellaam)
CharaNam 2
iiraaRu karaththavan oeraaRu mukaththavan
aRupatai viituvaaz vaezamuga iLavalavan
vaNNamayil amarntha Ganapri yanavan 
aNtiyoeraik kaaththitum aruLmigu vaLLalavan || 
(kunRamellaam)
பல்லவி
குன்றமெல்லாம் வீற்றிடும் குமரனுக்கு மங்களம்
குறவள்ளி உள்ளங்கவர் கள்வனுக்கு மங்களம் || 
(குன்றமெல்லாம்)
அனுபல்லவி
குவளைக் கண்ணனாம் வேலனுக்கு ஸோபனம்
குஞ்சரி மணாளனுக்கு கந்தனுக்கு ஸோபனம் || 
(குன்றமெல்லாம்)
சரணம் 1
துள்ளல் நடைபயின்று வேடனாய் வந்தவன் 
வள்ளிகானம் பருகியே தன்னையே இழந்தவன்
வினைகளைக் களைந்திடும் தேவசேனா பதியவன்
யானைமுகன் அருளால் வள்ளிகரம் பற்றியவன் || 
(குன்றமெல்லாம்)
சரணம் 2
ஈராறு கரத்தவன் ஓராறு முகத்தவன்
அறுபடை வீடுவாழ் வேழமுக இளவலவன்
வண்ணமயில் அமர்ந்த கானப்ரி யனவன் 
அண்டியோரைக் காத்திடும் அருள்மிகு வள்ளலவன் || 
(குன்றமெல்லாம்)