1.		
பக்தர்உள்ளம் உருக்கிடும் சிவசக்தி பிள்ளையவன் 
முருகா சண்முகா கந்தா குமரா  
எனும்பல நாமம் கொண்டவன் முருகன்  
எனும்பல நாமம் கொண்டவன் அண்ணன்
வேழவன் துதிக்கை முழமிட் டளந்து
புன்னகை பூத்த குறும்பு பிள்ளையவன்
வேழவன் அருளால் வள்ளிகரம் பற்றியசீலன்
எங்கள் உள்ளம் கொள்ளைகொண்ட செல்வன் - முருகன்  
எங்கள் உள்ளம் கொள்ளைகொண்ட செல்வன்.
2.	        
வேதநாயகனை சிறைப்படுத்தி ப்ரணவ திருமந்த்ரம்
சொக்கனுக்கு ஓதிய ஞானபண்டித பிள்ளையவன்
கயிலையில் ஓடிவிளையாடும் பிள்ளை முருகன்
கயிலையில் ஓடிவிளையாடும் பிள்ளை அவன்
சக்திவேல் கரம்கொண்டு விஸ்வ ரூபம்கொண்டு
ஸுரனை வதைத்த தீரப்பிள்ளை அவன்
அலைகள் முழங்கும் திருசெந்தூர் வாழ்குமரன்
கருணை மிகுஅருள் செல்வன் முருகன்
கருணை மிகுஅருள் செல்வன்.
3.	        
பன்னீரும் வெண்ணீறும் மணக்கும் மேனியனை
சன்னதி சென்று தரிசனம் செய்தால்
ஆதரவு தந்துஎம்மைக் காப்பான் முருகன்
ஆதரவு தந்துஎம்மைக் காப்பான் அவன்
வேழவன் தத்துவ பொருளை உணராது
மாம்பழம் கிட்டாது சீற்றம்கொண்ட பிள்ளையவன்
பழனிஅமர்ந்த ஆண்டிக்கோல குமரனைப் பஞ்சாம்ருத
அபிஷேகம் செய்துசாந்தி தந்தோம் பஞ்சாம்ருத 
அபிஷேகம் செய்து சாந்தி தந்தோம் 
 
4.	       
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
ஹரோஹரா முருகா ஹரோஹரா முருகா
என்றுசொல்லி காவடிதூக்கும் பக்தர்கான ரசிகன்
முருகன் பக்தர் கானரசிகன் அவன் 
மதிமுகம் கண்டு அபிமானம் கொண்டு
சீராட்டி பாராட்டி சரவணா என்றுசொன்னால்
ஆசிதந்து முக்தி ஆதாயம் தருவான்
எங்கள் திருபாக்ய அருள்கொடை வள்ளல்-முருகன்
எங்கள் திருபாக்ய அருள்கொடை வள்ளல்.