Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ராகம் : மத்யமாவதி
அலமேலு ப்ராட்டி ஸ்ரீனி வாசன்-திருக்
கல்யாண வைபோகமே-ப்ரும் மானந்தம்தரும் வைபோகமே ||
(அலமேலு)
சரணம் 1
சொல்வாக்கு காத்தாயோ வேதவதிக்கு அருளிட
பரந்தாமா.........ஸ்ரீ.ராமா..........
செல்வாக்குமிகு குபேரனிடம் கடன்வாங்கி ஒருகல்யாணமா
பத்ம நாபா.......வேங்கட நாதா..........
யசோதை அன்னையாம் வகுளாதேவி அகம்களிக்க
சொன்னசொல் காத்தாயோ கலியுக வரதா
ஸ்ரீனிவாசா..........ஹரிஹரி நாராயணா.........||
(அலமேலு)
சரணம் 2
ராகம் : அமிர்தவர்ஷிணி
மும்மூர்த்திகள் தேவர்கள்தவ ஞானியர்கள் புடைசூழ
வகுளாதேவியும் திருமகளும்தேவ மகளிரும்கைக் கொட்டிப்பாட
கரகமும் மயிலாட்டமும் கண்களைப் பறிக்க-பத்ம
நாபன்-கம்பீர நடைபோட்டு மாப்பிள்ளை ஊர்வலம்வர ||
(அலமேலு)
சரணம் 3
ராகம் : பௌளை
முப்பெரும் தேவியர்கள் அம்மானைப்பல பாடி-ஆட
தேவகன்னியர் புடைசூழ்ந்து வாத்யம்பல இசைத்திட
கங்காஸ்நானம் நீராடிதன்னை ஸ்ருங்காரித்த பத்மாவதி
மணமாலை அசைந்திட நாணிக்குனிந்து மணமேடைவர ||
(அலமேலு)
சரணம் 4
ராகம் : தன்யாஸி
ஹோமதீபம் வளர்த்து ஸப்தரிஷிகள் வேதம் ஓதபாத
பூஜைசெய்த பாக்யவான் ஆகாஸராஜனும் தாரணியும்
பத்மாவதியை ஸ்ரீனிவாசன்கரம் கன்னிகாதானம் செய்திட
ஸ்ரீரமணன் தேவிகழுத்தில் திருமாங்கல்யம் கட்டிட ||
(அலமேலு)
சரணம் 5
ராகம் : சுத்தஸாவேரி
வேங்கடகிரி ரமணன் அலமேலு கரம்பற்றி
அகம்களித்து அக்னியை மும்முறை வலம்வந்திட
அம்மி மிதித்து அருந்ததி பார்த்திட
மங்கள ஆசிபலகூறி ஆகாஸராஜன் வாழ்த்திட ||
(அலமேலு)
சரணம் 6
ராகம் : சுருட்டி
பத்மாவதி ஹ்ருதயவாஸ பத்ம நாபா
ஆனந்தகண்ணீர் பெருக்கி கண்குளிரச் செய்தாய்
நின்திருநாம கோஷம்கேட்டு மெய்குளிரச் செய்தாய்
முன்செய்த புண்யம்அப்பாநின் மணக்கோலக் காட்சிகாண ||
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
ராகம் : மத்யமாவதி
கொண்டாட்டமோ கொண்டாட்டம் எங்கும்கல்யாண கும்மாளம்
கொட்டோகொட் டெனகொட்டுது நாலுதிசையும் கானமழை
பட்டாஸுபோல் பிளக்குதுஎங்கும் நாதநாம மந்த்ரகோஷம்
ஸ்ரீவைகுண்ட மஹப்ரபோ ஸ்ரீவேங்கடேசா சரணம்
ஓம்நமோ பகவதே வாஸுதேவா சரணம்
ஸ்ரீஷேஷஸைல விஸ்வரூபா பத்மநாபா சரணம் ||
(அலமேலு)