Pallavi
Nilakantaa Thri-neethraa paadha-malar thunai-Iyaa
Niranjani priyaa SaamaGana rasihaa.
Anupallavi
Kaalamum OmNama ShivaaOm Namashivaa
Yena-chollum adiyeen-yenai kaaththarulaa krupaipuri.
Charanam
Nambi-nitham thozhutheen Ambighee Naadhaa ||
Eththukadai Swara Saahithyam
1.) Kaal-maari thaandavamaadum aanandha kuththaa || (Nambi nitham)
2.) Kaaraikkaal ammaikku arul-thandha Eswara || (Nambi nitham)
3.) Kallaal archchiththa adiyaanukku arulinaai
Chollaal vaattiya thontanukkulam kanindhaai
Thollaikal thudaikkum Tillai Naadhaa
Vilva laksha archchanaa priyaa || (Nambi nitham)
4.) ShaanthaSubha lakshana Pasupathee Girijaapathee
Nandheeswara Sabaapathee Kailaasa Umapathee
Powrnami madhi-vadhana Sachchidhaa nandhaRupaa
Gowri Parameeswaraa Maheeswara Vandhanam || (Nambi nitham)
பல்லவி
நீலகண்டா த்ரிநேத்ரா பாதமலர் துணைஐயா
நீரஞ்சனி ப்ரியா சாமகான ரஸிஹா
அனுபல்லவி.
காலமும் ஓம்நம சிவாஓம் நமசிவாஎனச்
சொல்லும் அடியேன்எனைக் காத்தருள க்ருபைபுரி
சிட்டாஸ்வரம்.
சங்கரா கங்காதரா சம்போ மஹாதேவா
சந்த்ர சேகரா ஜெகஜீவ ரக்ஷ்க்ஷகா
பஞ்ச மந்த்ர நாம விநோதா
சஞ்சலம் இல்லைஇனி தஞ்சம் தஞ்சம் ||(நீலகண்டா)
சரணம்.
நம்பிநிதம் தொழுதேன் அம்பிஹே நாதா ||
எத்துகடை ஸ்வர ஸாஹித்தியங்கள்.
1. கால்மாறி தாண்டவமாடும் ஆனந்த கூத்தா || (நம்பிநிதம்)
2. காரைக்கால் அம்மைக்கு அருள்தந்த ஈஸ்வரா || (நம்பிநிதம்)
3. கல்லால் அர்ச்சித்த அடியானுக்கு அருளினாய்
சொல்லால் வாட்டிய தொண்டனுக்குளம் கனிந்தாய்
தொல்லைகள் துடைக்கும் தில்லை நாதா
வில்வ லக்ஷ்க்ஷ அர்ச்சனா ப்ரியா || (நம்பிநிதம்)
4. சாந்தசுப லக்ஷ்க்ஷன பசுபதே கிரிஜாபதே
நந்தீஸ்வர சபாபதே கைலாச உமாபதே
பெளர்ணமி மதிவதன சச்சிதா னந்தரூபா
கெளரி பரமேஸ்வரா வந்தனம் || (நம்பிநிதம்)