பல்லவி
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய விநாயகா-உனை
வலம்வந்தேன் அனுதினம் அள்ளிஅள்ளி அருள்தருவாய் ||
(ஜெயஜெய)
அனுபல்லவி
மாயாலோக விநோத ஜெயஜெய விநாயகா-எனை
அர்ப்பணித்தேன் நின்னடி ஜெயஜெய விநாயகா ||
(ஜெயஜெய)
சரணம் 1
தொல்லைஇனி எனக்கேது வல்லப விநாயகா-மன
பல்லக்கு உனைசுமந்தேன் சிவசக்தி விநாயகா
கல்லும்கசிந் துருக்கும்திரு அருள்முக விநாயகா
தில்லை ஸ்தல ப்ரசித்த முக்குறுணி விநாயகா ||
(ஜெயஜெய)
சரணம் 2
அல்லல் துடைத்தருளும் செல்வ கணபதியே
அல்லும்என் உள்ளம்அமர் சுப்ரமண்யன் ஸோதரா-நான்
செல்லும் இடமெல்லாம்நீ வழித்துணையாய் வந்திட
சொல்மாலை சூட்டினேன் சாமகான ரஸிஹா ||
(ஜெயஜெய)