Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
சொல்லவார்த் தை இல்லைநீ பட்டகஷ்டம் க்ருஷ்ணா
லோகமானிட ருக்கோநீ அவதரித்து துனபுற்றாய் ||
(சொல்ல வார்த்தை இல்லை)
அனுபல்லவி
செல்லக் குழந்தையே மாடமாளிகை ஏதுமின்றி
அல்லல்கள் நடுவேநீ சிறைச்சாலை பிறந்தாயோ ||
(சொல்ல வார்த்தை இல்லை)
சரணம் 1
தாய்தேவகி அணைப்பின்றி கோகுலமோநீ சென்றாய்-கேசவா
உயிருக்குயிராய் நீநேசித்த ராதையைவிட்டு பிரிந்தாயோ
தாய்மாமன் கம்சனை வதம்செய்து கலங்கினாயோ-குரு
க்ஷேத்ரபோர் மாய்ந்தவீரர்தம் ரத்ததுளியில் உறைந்தாயோ ||
(சொல்ல வார்த்தை இல்லை)
சரணம் 2
ஹரிநாத கானப்ரேமா ஹரிஹரி கேசவா
கௌரவர்கர்ணன் வஞ்சகசதி கண்டுளம் கொதித்தாயோ-உன்
தங்கைமகன் அபிமன்யுவின் கொடும்மரணம்உனை வாட்டியதோ
சூர்யபுத்ரன் கர்ணன்பரிதாப நிலைகண்டுளம் நெகிழ்ந்தாயோ ||
(சொல்ல வார்த்தை இல்லை)
சரணம் 3
துரியோதனன்துடை பிளக்ககண்டு மனம்நொந்து தவித்தாயோ
அஸ்வத்தாமனை சபித்துநீ மனவேதனை அடைந்தாயோ
காந்தாரிதன் சாபத்தால் மனமுடைந்து கலங்கினாயோ-மீண்டும்
லஷ்மிசமேதனாய் காட்சிதர நீ வேடன்அம்புக் கிறையானாயோ ||
(சொல்ல வார்த்தை இல்லை)
சரணம் 4
பேசத்தெரியா பாசம் என்னுள்ளே நிறைந்தது
அதர்மமதை ஒழித்துதர்மம் நிலைநாட்டஒரு அவதாரமோ
மீண்டும்நீ இச்ஜெகமது குதுகூலதோற்றம் அளித்திட நின்
மலர்தாள் சரண்புகுந்தேன் கலியுக பரந்தாமா ||
(சொல்ல வார்த்தை இல்லை)