Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ராகம் : விநோதினி
கெட்டிமேளம் கொட்டட்டும் கௌரி சங்கராநின்
கல்யாண வைபோகம் கண்ணார நான்காண ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
அனுபல்லவி
பட்டைவிபூதி தரிக்கும் விநாயகன் மந்த்ரம்ஓத
சப்த ரிஷிகள் வேத மந்தரம்ஓத
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
சரணம் 1.
ராகம் : வாசஸ்பதி
கோடிமன்மத ரூபன் ஆடவல்லான் சொக்கன்
புனித நீராடி பட்டாடை தரித்து
ரத்னமணி மாலைஅசைய மகரகுண் டலமாட
வெண்கொற்ற குடைநிழலில் மாப்பிள்ளை ஊர்வலம்வர
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
சரணம் 2.
ராகம் : ரீதிகௌள
புண்யதீர்த்த நீராடி கஸ்தூரி திலகமிட்டு
பட்டாடை மின்னபொன் ஆபரணங்கள் சொலிக்க
கால்சிலம்பு கொஞ்சநாணி தலைகுனிந்து வரும்தேவியை
சரஸ்வதி ஸ்ரீலஷ்மி மணமேடை அழைத்துவர
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
சரணம் 3.
ராகம் : ஸாரங்கா
சுந்தர சொக்கனும் அகிலாண் டேஸ்வரியும்
மாமலர் கரத்தினால் மணமாலை மாற்றிட
நாதன் கரம்பற்ற காத்திருக்கும் நாராயணியை
கன்னிகாதானம் செய்து நாராயணன் அகம்களிக்க
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
சரணம் 4.
ராகம் : சௌராஷ்டிரம்
சங்கரன் திருமாங்கல்யம் கௌரிகழுத்தில் கட்டிட
தம்பதியர் அக்னியை மும்முறை வலம்வந்திட
அம்மி மிதித்து அருந்ததி பார்த்திட
குலம்விளங்க வாழ்கஎன நாராயணன் வாழ்த்திட
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)
சரணம் 5.
ராகம் : மதுவந்தி
திவ்யதரி சனம்கண்டு மதுவுண்டவண் டுபோலாகி
விண்ணவர் மண்ணவர் ஆனந்தம் கரைபுரள
ஓம்நம பார்வதிபதே ஹரஹர மஹாதேவாஎன
கோஷமிட்டு மலர்தூவி வந்தனம் செய்திட
சாஹித்ய சிட்டாஸ்வரம்
"கௌரி கல்யாண வைபோகமே கௌரி
கல்யாண வைபோகமேஎன நாரதன்அமுத கானமிசைக்க
துந்துபிகள் முழங்கிட தேவமாதர்கள் நடனமாட
பக்தகோடி பெருமக்கள் பேரானந்தக் கடல்மூழ்க" ||
(கெட்டிமேளம் கொட்டட்டும்)