Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
லஷ்மி நாராயணா வைகுண்ட வாசா
துஷ்டரை வதைத்திட தசாவதாரம் எடுத்தோனே ||
(ல்ஷ்மி நாராயணா)
அனுபல்லவி
அஷ்டதிசை வாழ்மக்கள் போற்றும் நாராயணா (நாராயணா....)
புஷ்பங்களால் அர்ச்சித்து பாதகமலம் பணிந்தேன்-ஸீதா ||
(லஷ்மி நாராயணா)
சரணம் 1
மண்ணுண்ட வாயோனே செங்கமலக் கண்ணனே (க்ருஷ்ணா....)
மண்ணுலகை திருவாயில் யசோதைக்குக் காட்டினாய்
கோபியர்க்குத் தொல்லைதந்த பத்ம நாபா
கள்ளமில்லா மணிவண்ணா-என் உள்ளத்து உறைபவனே-ஸீதா ||
(லஷ்மி நாராயணா)
சரணம் 2
கன்னத்தில் முத்தமிட்டு தாலாட்டு கானம்பாட
என்னதவம் செய்தாளோ உன்-அம்மா கௌசல்யா
வாடாரகு ராமாஎன தசரதன் உனைஅழைத்து
வாஞ்சையுடன் பேணிட என்னதவம் செய்தானோ-ஸீதா ||
(லஷ்மி நாராயணா)
சரணம் 3
சன்னதி வந்தேனைய்யா ஸீதாலஷ்மி நாயகா
சன்மானமாய் தருவாய் நின்னருள் அமுதை
ஆனந்த ஸாகரத்தில் திளைக்கும் மாதவன்
சங்கீத ப்ரியோனே சரணடைந்தேன் மலரடி-ஸீதா||
(லஷ்மி நாராயணா)