Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
1. ராகம் : கல்யாணி
ஸுந்தரத் திருவடியைச் சிந்தையில் நினைத்து
வந்தனை செய்திடும் வரமதைத் தருவாயே
தீந்தமிழால் பாடிஎன் இதயமலர் தந்தேன்
செந்தமிழ் செல்வியே கல்யாணி தேவியே || (ஸுந்தரத் திருவடியை)
2.
வடிவழகை நான்காண சன்னதி வந்தேன்-அம்மா
கடிமலரேநின் புகழ்பாட சொல்லேது சொல்-அம்மா
நீடிய பாதையைக் காட்டிய தேவி-அம்மா
வாடிய பேதையைக் கரையேற்ற வா-அம்மா
சிட்டாஸ்வரம்
தா , ப ம க ரி ஸ - ரீ , க ரி நி த ப | ஸ் ; ; ப ப | ஸ் ஸ் - ப ப ரீ ரி ||
கா க- மா ம -தா த-பா ப - த நி ஸ ரி | ஸ நீ- த ப ம க ரி | ஸ ரி க ம ப த நி ஸ ||
(ஸுந்தரத் திருவடியை)
3. ராகம் : தோடி
காரைக்கால் அம்மைக்கு அருளிய உன்நாயகனை
அழைத்தோடி வருவாய் நான்காண அருள்வாயே
குழைந்தேன்நின் நாமம்கேட்டு அடிமை ஆனேன்நான்
பிழையேதும் செய்தாலும் பொறுத்திடு தாயே
சிட்டாஸ்வரம்
ரீ , நீ தா மா - தா ம க ரி ஸா | ஸா ரி கா ம - க ம | ப த ப - த நி ஸ ரி ஸ ||
கரீ-ரி நீ - நி தா-தமா-த நிஸரி | ஸ ரி ஸ நீ த ப ம | ஸ ரி க ம ப த நி ஸ ||
(ஸுந்தரத் திருவடியை)
4. ராகம் : நீலாம்பரி
அஞ்சனம் தீட்டிய அருள்வி ழியாளே
வஞ்சிக் கொடியே நீலாம்பரி தாயே
மெய்ஞானம் அடைய-நின் நாமம் பகன்று
தஞ்சமென் றடைந்தாரைக் காத்திடும் தாயே
சிட்டாஸ்வரம்
ஸா ஸ - பா ப- ஸ ப ம பா- ம க மா ம | க ம ப ரி - ஸ நி ப ம | க - ரிக மா , கஸ் ||
ஸாஸ -ரிகமகஸ -ஸாஸ- ஸ நி நிபம | ஸ நி ப- நி ப ம- க ம | பரிஸ நிப-ப நிஸ ||
(ஸுந்தரத் திருவடியை)
5. ராகம் : ரஞ்சனி
நித்திய உலகு ஏதென்று அறிந்தேன்
எத்தனை நாட்கள்நான் வீணாக கழித்தேன்-அம்மா
சித்தம் இரங்கிட தாமதம் ஏனோ
பக்தன்எனை ரக்ஷ்க்ஷிக்க ரஞ்சனியே வருவாயே
சிட்டாஸ்வரம்
தா , ஸ நி நி த ம தா , ம த ம க ரி | கா , ஸ ரி க ஸா | ; , ஸ ரி க ம த ||
ஸரிக ஸா ஸா ஸ - மதஸ தா தா த | ஸரிக-ஸ நித-ஸ் | நிதமக-ஸரிகஸ ||
சிட்டாஸ்வரம் : நீலாம்பரி
சிட்டஸ்வரம் : தோடி
சிட்டாஸ்வரம் : கல்யாணி ||
(ஸுந்தரத் திருவடியை)