Pallavi
Shankari Shiva-Baalaa Shanmuga vadivaelaa
thungakkari muganpriyaa vaLLikaa nthaacharaNam ||
(Shankari Shiva-Baalaa)
Anupallavi
yaengum niRaintha paramporuLae unai-ninainthu
yaengi urugi-nin thuthipaadi maeyichilirththaen
Chittaswaram
Thiruchchenthuur Pazani Swaamimalai naadhaa-Thirup
parangunRam Pazamuthir-Thiruth thaNikai-amar Ananthaa ||
(Shankari Shiva-Baalaa)
CharaNam
Njaana pazamae njaana paNdithaa
Gana rasihaa-yen sathguru Devaa-mana
ARuthal tharuvaai-ARu mugaa-Gugaa Murugaa-nin
ThiruvaruL onRuvaeNdum uLamkaninthu irangidu.
Chittaasvaram ||
(Shankari Shiva-Baalaa)
பல்லவி
சங்கரி சிவபாலா சண்முக வடிவேலா
துங்கக்கரி முகன்ப்ரியா வள்ளிகா ந்தாசரணம் ||
(சங்கரி சிவபாலா)
அனுபல்லவி
எங்கும் நிறைந்த பரம்பொருளே உனை-நினைந்து
ஏங்கி உருகி-நின் துதிபாடி மெய்சிலிர்த்தேன்
சிட்டாஸ்வரம்
திருச்செந்தூர் பழனி ஸ்வாமிமலை நாதா-திருப்
பரங்குன்றம் பழமுதிர்-திருத் தணிகை-அமர் ஆனந்தா ||
(சங்கரி சிவபாலா)
சரணம்
ஞானப் பழமே ஞான பண்டிதா
கான ரஸிஹா-என் சத்குரு தேவா-மன
ஆறுதல் தருவாய்-ஆறு முகா-குகா முருகா-நின்
திருவருள் ஒன்றுவேண்டும் உளம்கனிந்து இரங்கிடு.
சிட்டாஸ்வரம் ||
(சங்கரி சிவபாலா)