பல்லவி
பக்த வத்ஸலா கட்டுபட்டாயோ என்அன்பிற்கு
தசஅவதார புருஷா ஹரிஹரி நாராயணா ||
(பக்த வத்ஸலா)
அனுபல்லவி
செக்கசிவந்த நின்னடிபற்றி புகழ்கானம் பாடினேன்
என்ஆன்ம பேரொளியே ஆபத் பாந்தவா ||
(பக்த வத்ஸலா)
சரணம் 1
அள்ளஅள்ள குறையாஎன் அபிமான களஞ்சியமே
எள்ளளவும் குறையில்லாஎன் இனம்புரியா அனுபவமேஎன்
உள்ளம் கொள்ளைகொண்ட கள்ளமில்லா கள்வனே
கிள்ளைமொழி வள்ளலேஎன் த்யானஞான ப்ரகாஷா ||
(பக்த வத்ஸலா)
சரணம் 2
கட்டுண்டாய் நரஸிம்ஹா ப்ரஹலாதன்மழலை சொல்கேட்டு
கட்டுண்டாய் ராமா தசரதன்சொல் தர்மம்காக்க
கட்டுண்டாய் உரலில் யசோதைதன் அன்பிற்கு
கட்டுண்டாய் குபேரனிடம் சுதாமா செல்வம்காக்க ||
(பக்த வத்ஸலா)