Pallavi
Samayam samayam ithuthaan samayam
samiipam varuvaai aravaNaith tharuLvaai ||
(Samayam)
Anupallavi
Kamala chevvati thiruvazaku kaNtaen
vimmitham koNtaen thuthipaati enaimaRanthaen ||
(Samayam)
CharaNam 1
Kamazmaalai aNinthavanae piRaimathi chuuteonae
ThaamaSam cheyyaathae en uLam amar amalanae
Namachivaaya naamaththai jepiththu thanaimaRantha
Imavaan inmagaL karampaRRiya Maha Deva ||
(Samayam)
CharaNam 2
Chaamaram viisinaen kataikkaN noekkuvaai
ShyaamaLa ruupanae SamaGana priyoenae
Tamaruka oliezuppi natamaatum kuuththoenae
Nimalanae Thillaivaaz priyaaGowri naayakaa ||
(Samayam)
பல்லவி
சமயம் சமயம் இதுதான் சமயம்
சமீபம் வருவாய் அரவணைத் தருள்வாய் ||
(சமயம்)
அனுபல்லவி
கமல செவ்வடி திருவழகு கண்டேன்
விம்மிதம் கொண்டேன் துதிபாடி எனைமறந்தேன் ||
(சமயம்)
சரணம் 1
கமழ்மாலை அணிந்தவனே பிறைமதி சூடியோனே
தாமஸம் செய்யாதே என் உளம் அமர் அமலனே
நமசிவாய நாமத்தை ஜெபித்து தனைமறந்த
இமவான் இன்மகள் கரம்பற்றிய மகாதேவா ||
(சமயம்)
சரணம் 2
சாமரம் வீசினேன் கடைக்கண் நோக்குவாய்
சாமள ரூபனே சாமகான ப்ரியோனே
டமருக ஒலிஎழுப்பி நடமாடும் கூத்தோனே
நிமலனே தில்லைவாழ் ப்ரியாகௌரி நாயகா ||
(சமயம்)