Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பொல்லா தனத்தைக் கேளடி ராதே-பழம்
இந்தாஇந்தா என்றுசொல்லி என்-கைபிடித்து கடித்தகண்ணன் ||
(பொல்லாத்தனத்தை)
கள்ளத் தனமாய் அக்கம்பக்கம் பார்த்து
மெல்லமெல்லவந்து வெண்ணைதிருடி உண்ட கண்ணன்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
ஓரக்கண் பார்த்துபார்த்து கண்சிமிட்டும் குறும்புபிள்ளை
இருகரம் கொட்டிகொட்டி நெக்குருக்கும் செல்லபிள்ளை
முத்துப்பல் காட்டிகாட்டி கலகலகலஎன சிரிக்கும்பிள்ளை
தத்திதத்திதளிர் நடையிட்டு-பர மானந்தம் தரும்பிள்ளை ||
(பொல்லாத்தனத்தை)
சரணம்
கோபிகை உளம்வாழ் ஸ்ருங்கார கள்வனவன்
பின்னின்று சேட்டைசெய்யும் வீம்புக்கார வம்பனவன்
ஆதிமூலமே! என்றழைத்த கஜேந்த்ரனை ரக்ஷ்க்ஷித்தவன்
அடியாரைக் காத்திடஎன்றும் மனமிரங்கும் அன்பனவன்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(பொல்லாத்தனத்தை)