Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
மாயவனே க்ருஷ்ணா தயை-நீ புரிவாய்
நயந்தேன் நின்னருள் தூயவனே ராதாப்ரியா ||
(மாயவனே)
அனுபல்லவி
சாரதியே பாரதியே பேதைஎன் வழிகாட்டியே-நின்
சாந்திதரும் மலரடிஎன் சாசுவத சொத்து ||
(மாயவனே)
சரணம் 1
என்னிலை கண்டுமா ஆனந்தகுழல் ஊதுகிறாய்
ஊண்வேண்டேன் பொருள்வேண்டேன் உலகாசைத் துறந்தேன்
சேவடியில் ஆசைமிகக் கொண்டேன் கண்ணா-நின்
ஜோதியில் கலந்திடும் நல்வரமதைத் தருவாயே ||
(மாயவனே)
சரணம் 2
பூவுலகு காத்திட தசாவதாரம் எடுத்தாய்
மூவுலகு அளந்திட விஸ்வரூபம் எடுத்தாய்
முப்பதுபா மாலைதொடுத்து அன்புமாலை சார்த்தினேன்(கண்ணா)
பூமிக்கு பாரம்-நான் அரவணைப்பாய் கானப்ரியா ||
(மாயவனே)