Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
முழுநம்பிக்கை எனக்குண்டு சக்திரூப வினாயகா
பாதாரம் சரண்புகுந்தேன் கானப்ரேம லோலா ||
(முழுநம்பிக்கை)
அனுபல்லவி
எழுந்தருள்வாய் நம்பித்தொழும் அடியேன் என்னிடம்
ஸப்தஸ்வர நாதா விக்ன வினாயகா ||
(முழுநம்பிக்கை)
சரணம்
மழுகரம் ஏந்தும் சக்திசிவ செல்வா-நாள்
பொழுதும் உனைநினைந்து மெழுகென உருகினேன்நல்
வாழ்வு அருளும் வள்ளலே வினாயகா
வேழமுக ஐயனே ஸித்தி வினாயகா ||
(முழுநம்பிக்கை)