Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
நாராயணா ஹரே நாரா யணா-நினை
சீராட்டும் நாயேனிடம் பாராமுகம் ஏனைய்யா ||
(நாராயணா ஹரே)
அனுபல்லவி
ஆராதனை செய்தேன் திருநாமம் பாராட்டி
தாராயோ பதமலர் ஜெயஸ்ரீ சீதாலக்ஷ்மி
நாராயணா லக்ஷ்மிநாராயணா......
ஆராதனை செய்தேன் திருநாமம் பாராட்டி
தாராயோ பதமலர் ஜெயஸ்ரீ சீதாலக்ஷ்மி ||
(நாராயணா ஹரே)
சரணம்
முராரி முகுந்தாஎன இசைபாடும் ஏழைக்கு
பேராதரவு தந்தாள ஏனப்பா தாமதம்
நாராயணி சோதரா பாண்டுரங்க விட்டல
பாண்டுரங்கா......
நாராயணி சோதரா பாண்டுரங்க விட்டல
ஆரமுதே அரங்கா பத்மநாப கானப்ரியா
நாராயணா லக்ஷ்மிநாராயணா.....
நாராயணி சோதரா பாண்டுரங்க விட்டல
ஆரமுதே அரங்கா பத்மநாப கானப்ரியா ||
(நாராயணா ஹரே)