Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ஆனந்த நடமாடும் தில்லை சங்கரா
ஆதிபரா சக்தியை இடப்பக்கம் தாங்கி ||
(ஆனந்த நடமாடும்)
அனுபல்லவி
அனுதினம் ஹரஹர மஹாதேவா எனக்கூறும்
அன்பர்தம் உள்ளத்தை ஆலயமாய் கொண்டு ||
(ஆனந்த நடமாடும்)
சரணம் 1.
சங்கரா பரண கானத்தில் மயங்கி
சங்கு குழைஅணிந்த ஓம்சக்தி நாயகா
முத்தமிழ் வல்லவாநீ உன்மத்தம் அடைய
தித்திக்கும் தமிழில் நான்பாட நீகேட்டு ||
(ஆனந்த நடமாடும்)
சரனம் 2.
சாவித்திரி நாயகா நான்மறை முதல்வா
சிவனை ஸேவிக்கும் மறைவழி காட்டுவாய்
நடமாடும் தருணத்தில் கீழ்விழுந்த குழைதனை
இடக்காலால் அணிந்து கலைத்திறன் காட்டியே ||
(ஆனந்த நடமாடும்)