Pallavi
Thaaleelo Thaaleelo Shivashakthi Ganapriyaa
Thaaleelo Thaaleelo kanmaniyee Vinayaka ||
(Thaaleelo)
Anupallavi
Kanganam anintha Iingkara naadhaa
Sangeetha naadhaprabho Sidhdhi Vinayaka ||
(Thaaleelo)
Charanam 1
Andiyorai kaakkum SelvaGana pathiyee-Shiva
Thaantava priyaa Narththana Vinayaka
Karathalam-Mo thagam-thaangi thaamarai-malar amarntha-yen
Kankanta Deivamee kula-vilakkee arul-chutaree ||
(Thaaleelo)
Charanam 2
Sellakkuzhan thaiyee-un punsirippil yenai-mayakki
Konji konji-peesi paramaanandham thanthaai
Kannee Selvamee Aaramuthee yena-kenjiyum
Kannu rankaathu vambu-cheithal niyaayamo ||
(Thaaleelo)
பல்லவி
தாலேலோ தாலேலோ சிவசக்தி கானப்ரியா
தாலேலோ தாலேலோ கண்மணியே வினாயகா ||
(தாலேலோ)
அனுபல்லவி
கங்கணம் அணிந்த ஐங்கர நாதா
ஸங்கீத நாதப்ரபோ ஸித்தி வினாயகா ||
(தாலேலோ)
சரணம் 1
அண்டியோரைக் காக்கும் செல்வகண பதியே-சிவ
தாண்டவ ப்ரியா நர்த்தன வினாயகாஅ
கரதலம்-மோ தகம்-தாங்கி தாமரை-மலர் அமர்ந்த-என்
கண்கண்ட தெய்வமே குல-விளக்கே அருள்-சுடரே ||
(தாலேலோ)
சரணம் 2
செல்லக்குழந் தையே-உன் புன்சிரிப்பில் எனை-மயக்கி
கொஞ்சி கொஞ்சி-பேசி பரமானந்தம் தந்தாய்
கண்ணே செல்வமே ஆரமுதே என-கெஞ்சியும்
கண்ணு ரங்காது வம்பு-செய்தல் நியாயமொ ||
(தாலேலோ)