Page History: Sample Demonstration Page

Compare Page Revisions



« Older Revision - Back to Page History - Newer Revision »


Page Revision: 2010/04/25 18:36




பஞ்சரத்ன க்ருதி

3. கமல ஸித்தி வினாயகா.

ஊஞ்சல் பாட்டு.

ராகம் : ஹிந்தோளம். தாளம் : ஆதி.
இயற்றியவர் : கானசரஸ்வதி.

பல்லவி.

ஆனந்த ஊஞ்சல் ஆடுக வினாயகா
ஹரன்ப்ரிய சக்தி-பாலா கானப்ரிய லோக-நாதா ||
(ஆனந்த)

அனுபல்லவி.

தாம்பூலம் தரித்து-மன ஊஞ்சல் ஆடி-நிதம்
தென்றலாய் அருள்-வீசும் அமுத சுரபியே ||
(ஆனந்த)
சரணம்.

1. ஸன்னதி நாடி-வந்து சந்தன காப்பு-பூட்டி
அன்பு-முத்தா ரம்-சூட்டி பாமாலை சார்த்தினேன் ||
(ஆனந்த)

2. தண்ணருள் ஒலி-வதனம் காந்தமென இழுக்க
பண்ணிசை புகழ்-பாடி அடைக்கலம் புகுந்தேன். ||
(ஆனந்த)

3. மெய் ஞானம் தந்தருளும் தத்துவ ஞானியே
மதுர-ஸங்கீ த-சாகரா விக்ன ராஜா ||
(ஆனந்த)

4. வேலன்ப்ரிய ஸோதரா வேழ-முகா மோதகப்ரியா
குலவிளக்கே ஏகதந்தா ஸித்தி வினாயகா ||
(ஆனந்த)

**********************