Pallavi
Omgaara naadhaa Aingaraa charaNam
SangadangaL thudaiththidum Shankari baalaa ||
Anupallavi
SangupushpangaL vaarivaari kamala-adi thuuvimana
Thangaththaeril unaiamarththi uurvalam vanthaen ||
CharaNam 1
SankathThamizh chelvan KanthanPrema Sodharaa
SenthaLirmaeni Chokkan SaamaGana Anandhaa
KangaNa karamadhu modhagam thaangidum
Thunga Karimugaa yemairakshkshi yenRenRum ||
CharaNam 2
KalNenjanYenai malarvillaai vaLaiththa Vinayaka-Yen
EdhayaVeeNai miittimiittiNal Ganamthanthaai Vinayaka-nin
Dharisanam kaattikaatti yenaimayakkinaai Vinayaka
YenRenRumUn Dhaasanaai adipaNinthaen Vinayaka ||
பல்லவி
ஓங்கார நாதா ஐங்கரா சரணம்
சங்கடங்கள் துடைத்திடும் சங்கரி பாலா ||
அனுபல்லவி
சங்குபுஷ்பங்கள் வாரிவாரி கமலஅடி தூவிமன
தங்கத்தேரில் உனைஅமர்த்தி ஊர்வலம் வந்தேன் ||
சரணம் 1
சங்கத்தமிழ் செல்வன் கந்தன்ப்ரேம ஸோதரா
செந்தளிர்மேனி சொக்கன் சாமகான ஆனந்தா
கங்கண கரமது மோதகம் தாங்கிடும்
துங்கக் கரிமுகா எமைரக்ஷ்க்ஷி என்றென்றும் ||
சரணம் 2
கல்நெஞ்சன்எனை மலர்வில்லாய் வளைத்த விநாயகா-என்
இதயவீணை மீட்டிமீட்டிநல் கானம்தந்தாய் விநாயகா-நின்
தரிசனம் காட்டிகாட்டி எனைமயக்கினாய் விநாயகா
என்றென்றும் உன்தாஸனாய் அடிபணிந்தேன் விநாயகா ||