Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
நந்திதேவன் ப்ரேம கௌரி சங்கரன்
கண்மணியே செல்வமே விநாயகா சரணம் ||
(நந்திதேவன்)
அனுபல்லவி
சிந்தை கொலுவிருக்கும் சிந்தா மணியே-மன
நிம்மதி தந்தருளும்-என் நிரந்தர அருள்நிதியே
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
மணியே அருள்திரு ரத்னமா மணியே
சூடாமணி அணிகார்த் யாயனிகண் மணியே
கிண்கிணிமணி சிலம்பணி கல்யாணிப்ரேம சிகாமணியே
பணிந்தேன் இணையடி கண்ணிரங்கு கலைமாமணியே ||
(நந்திதேவன்)
சரணம்
நெஞ்சுருக்கும்-நின் உருக்கண்டு மனம்பேதலித்து எனைமறந்தேன்
நெஞ்சார-உனைப் போற்றிபோற்றி கானம்பல பாடினேன்
நேசமோ பாசமோ ஒருநாளும் நானறியேன்
நயந்தேன் நின்னடி-என் ஹ்ருதயமலர் தூவித்தூவி
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(நந்திதேவன்)