Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
பாதசலங்கைக் குலுங்க நடன மாடுவாய்
சிவகாமி மணாளா தில்லை நடராஜா
அனுபல்லவி
தீம்ததீம்த ததிங்கிணதோம் ஜதியோடு டமருமுழங்கி
கால்மாறிஆடும் தரிசனம்நான் காணஅருள் வாய்சங்கரா
முக்தாயிஸ்வரம்
கூத்தா சபேசா அம்பல வாணா
சித்தர்பக்தர் உளம்வாழ் நித்ய ஆனந்தா
வில்வ அர்ச்சன பஞ்சாக்ஷ்ர மந்த்ரநாதா
பூலோக கைலாச சிதம்பர நாதா ||
(பாதசலங்கை)
சரணம்
சாமகான ஆனந்தா பொன்னம்பல வாசாசரண் ||
எத்துக்கடைசாஹித்ய சரணங்கள்
1.சதாஉனை நினைந்துருகும் ஜீவன்நான் ஐயனே ||
(சாமகான)
2.எல்லாம் சிவமயம் என்றுஎண்ணும் அடியேனுக்கு
மனமிரங்கி நிதம்அருள்வாய் சிற்றம்பல நாதா ||
(சாமகான)
3.வில்லங்களை நிதம்துடைத்து எல்லைமிகு களிப்புதருவாய்
பஞ்சபூத ஸ்தல ஆனந்த மூர்த்தி ||
(சாமகான)
4.முக்காலமும் கடந்த ஞானகூத்தன் பூமி
சிதம்பர ரகசிய தில்லைவன பூமி
தேவார பதிகம் கண்டெடுத்த பூமி
பக்தர் வெள்ளம் பெருக்கெடுக்கும் பூமி
(சாமகான)
5.தீச்சுவலைக் கரம் ஏந்தும் சம்ஹார மூர்த்தி
சூரனை மிதித்து ஆணவம் ஒழித்து
உடுக்கை ப்ரணவநாத ஒலிஎழுப்பி படைத்து
அபயஹஸ்த கரம்நீட்டி எமைக்காக்கும் நடராஜன் ||
(சாமகான)