பல்லவி
ஸர்வ லோக க்ஷேம ஸஞ்சாரா
ஸெளபாக்ய ஸ்வருபா ஸூர்யமூர்த்தி நமஸ்தே || (ஸர்வ)
அனுபல்லவி
பார்புகழ் கர்ணன் ஸர்வா னந்தா-திரு
மங்கலங்குடி ஸர்வேஸ்வரன் அனுக்ரக பரஞ்ஜோதியே
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
செந்தாமரை கரம்ஏந்தும் மாணிக்க மாலாதரா
செந்நிற வஸ்த்ர ஸப்தபரி வாஹனா
செந்தளிர் மேனியா ஸிம்ஹராஸி அதிபதியே
ஸுந்தரா நித்ய தரிசன பாஸ்கரா || (ஸர்வ)
சரணம் 1.
ஆடுதுறை ஸூரியனார் கோவில்ஸ்தல வாஸா
கோதுமை தான்யப்ரேம நவக்ரக முதல்வா
ஸ்வர்ண கதிரோனே மகேஸ்வரன்ரவி லோசனா-நாலு
வேதங்கள் போற்றும் சாயாதேவி மோஹனா
ஸாஹித்ய சிட்டஸ்வரம் || (ஸர்வ)
சரணம் 2.
திடமான பலமும் ஆரோக்ய நலமும்
கல்விகலை வளமும் யோகபலமும் தந்தருள
கரம்கூப்பி தொழுது-நின் பரமபதம் சரண்புகு ந்தேன்
ப்ரசித்த காலசக்ரா தினகரா ப்ரபாகரா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் || (ஸர்வ)
சரணம் 3.
ஆதித்ய ஹ்ருதய மந்த்ரகான ரஸிஹா
ஆதவா உனைப்பணிந்து ஏற்றினேன் நெய்விளக்கு
சக்கரைப் பொங்கலோடு உளுந்துவடை படைத்து
என்னிலை மறந்துஸூர்ய நமஸ்காரம் செய்தேன்
ஸாஹித்ய சிட்டஸ்வரம் || (ஸர்வ)