Pallavi
Adaikkalam pugunthaenNin aruLpaarvai yenmiidhupada
KadaikkaN noakkidu aruLthiru GuruDeva ||
Anupallavi
Kodi nanmaikaL naaLumNii thaintharuLvaai
Raja Guruve Viyaazha Bhagavaane ||
CharaNam 1
KonRai Mullaipushpa archchanai naeyaa
Pushparaaga padhakka manjaL aadai alangaaraa
Padaiththaen paruppodu inippu pongalNin
ParipuurNa kadaakshksham onRumattum nidhamvaeNdi ||
CharaNam 2
Shantha Murththiyae AtaaNaa raagaprema
VashishtaeSvara aalaya mangaLa GuruDeva
ThiruGnjaana Sambandhan padhigaGana raSihaa
Nambikaram thozhudhaen anukragamthaa BrahaSpathae ||
பல்லவி
அடைக்கலம் புகுந்தேன்நின் அருள்பார்வை என்மீதுபட
கடைக்கண் நோக்கிடு அருள்திரு குருதேவா ||
அனுபல்லவி
கோடி நன்மைகள் நாளும்நீ தந்தருள்வாய்
ராஜ குருவே வியாழ பகவானே ||
சரணம் 1
கொன்றை முல்லைபுஷ்ப அர்ச்சனை நேயா
புஷ்பராக பதக்க மஞ்சள்ஆடை அலங்காரா
படைத்தேன் பருப்போடு இனிப்பு பொங்கல்நின்
பரிபூர்ண கடாக்ஷ்க்ஷம் ஒன்றுமட்டும் நிதம்வேண்டி ||
சரணம் 2
சாந்த மூர்த்தியே அடாணா ராகப்ரேம
வசிஷ்டேஸ்வர ஆலய மங்கள குருதேவா
திருஞான சம்பந்தன் பதிககான ரஸிஹா
நம்பிக்கரம் தொழுதேன் அனுக்ரகம்தா ப்ரஹஸ்பதே ||